தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது உறுதிப்படுத்தப்படாத செய்தியாகும்.
மேலும் சிறையில் உள்ள ஒருவரை அமைச்சரவையில் வைத்து பிரச்சனைகள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
இதேவேளை, அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரம்புக்வெல்லவை அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோருகிறது.
அவரை மேலும் அமைச்சரவையில் வைத்தால் எதிர்கால விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் அவ்வாறான ஒருவரை அமைச்சரவையில் வைத்தால் சர்வதேச ரீதியிலும் இந்நாட்டு அமைச்சரவை மீது அதிருப்தி ஏற்படலாம் எனவும் அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.