web log free
December 02, 2023

1800 தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணை

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.