கட்சியின் தலைமையை விமர்சிக்கும் மற்றும் கட்சியின் கூட்டு முடிவுகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சமகி ஜன பலவேக தீர்மானித்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என கட்சித் தலைமை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது முழு குழுவும் சபையை விட்டு வெளியேறும் தீர்மானத்தை எடுத்தபோது, அதை புறக்கணித்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தங்கினர்.
இவ்வாறு குழுவாக தீர்மானங்களை எடுக்கத் தவறும் எம்.பி.க்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.