web log free
June 23, 2026

பொலிஸாருக்கு மேலதிக கொடுப்பனவு

பொலிஸ் உத்தியோகத்தர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவின் 50% உடன் முழு கூட்டு கொடுப்பனவையும் வழங்குவதற்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த வார தொடக்கத்தில் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட கூட்டு கொடுப்பனவின் எஞ்சிய பகுதியும் உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd