web log free
December 07, 2023

மேன்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு

கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று அழைக்கப்பட்டது.

அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மனுவின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 06ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.