web log free
December 02, 2023

பழைய தவறை மீண்டும் செய்ய கூடாது

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தவறை மீண்டும் செய்ய வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

83இல் செய்த தவறை நாம் திரும்பவும் செய்யக்கூடாது. நாம் எந்தவொரு இனக்குழுவையும் ஒதுக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தை மிகக் குறுகிய காலத்திற்குள் ஒழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், சில தரப்புக்கள் கட்டுக்கதைகளைப் பரப்பி மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்த முயற்சிப்பதான கருத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் தேசிய வைபவம் நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

இதன் போதே பிரதமர் மேற்குறிப்பிட்ட விடயங்களை கூறினார்.