சுகாதார அமைச்சுடன் இணைந்து பாலர் பாடசாலை முதல் உயர்நிலைப் பாடசாலை வரையிலான குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை மார்ச் 7ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள குழந்தைகளுக்கான மன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு கல்வி அமைச்சினை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாக இருந்தாலும், குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் புத்தகங்களை தயாரித்து முடிக்க முடியாத நிலையே மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளதுடன், பாடத்திட்டத்திற்கு அமைய புத்தகங்களை தயாரிக்கும் பணியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அந்தப் பொறுப்பை அமைச்சு இதுவரை நிறைவேற்றாததால், சுகாதார அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக மன்றத்தின் தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
பாடத்திட்டத்தின்படி சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வரைகலை வடிவமைப்பு அன்றைய தினம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.