இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.
சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றின் போது அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன் காரணமாக அரசியலமைப்பு மீறப்படுகிறது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணம் மீறப்படுகிறது, நாட்டின் இறைமை மீறப்படுகிறது என வசந்த பண்டார தெரிவித்தார்.
அதன் காரணமாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


