குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தின் வரிசைகளை குறைக்கும் வகையில் இ-பாஸ்போர்ட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கொரிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு மட்டும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டிரான் அலஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.