web log free
March 17, 2026

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்

தாம் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பாவிட்டாலும், தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அச்சமின்றி எதிர்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நிலைப்பாடு குறித்து தாம் மிகவும் ஏமாற்றமடைவதாகத் தெரிவித்த சபாநாயகர், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேர்மையாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து ஏமாற்றம் அடைந்தாலும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

சமகி ஜனபலவேகவினால் தமக்கு எதிராக இன்று கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd