web log free
March 28, 2026

வெப்பநிலை உயர்வு குறித்த தகவல்

இன்று (29) வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, முடிந்தவரை உடலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் செயல்படுமாறு திணைக்களம் மக்களுக்கு தெரிவிக்கின்றது.

இதேவேளை, வெப்பமான காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை வரை அதிக வெப்பநிலை நிலவும் போது பாடசாலை மாணவர்களை வெளியில் தங்க வைப்பதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd