வெளிக் களத்தில் கடமையாற்றும் குழுக்கள் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதார திணைக்களத்தின் நிபுணர் டொக்டர் இனோகா சுரவீர தெரிவித்தார்.
அதன்படி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரையிலான காலப்பகுதியை அபாய காலம் எனலாம்.
இதனால், கட்டுமான தொழிலில் ஈடுபடும் மக்கள், திறந்த வெளியில் வியாபாரம் செய்பவர்கள், தொழிலாளர்கள், பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது குறித்து அக்கறையுடன் இருக்க வேண்டும்.
அத்தகையவர்கள் முடிந்தவரை சூரிய ஒளியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
மேலும், அந்த நேரத்தை தவிர்த்து பணி அட்டவணையை தயார் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டது.
இதுபோன்ற வேலைகளைச் செய்பவர்கள் வெளிர் நிற ஆடைகளை அணிவதும், முடிந்தவரை தண்ணீர் உள்ளிட்ட இயற்கையான திரவங்களை அருந்துவதும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.