web log free
May 18, 2026

மசாஜ் நிலைய பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள்

ரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ புனித ரீட்டா பரா பிரதேசங்களில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 02 விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இடத்தை நிர்வகித்த இரு பெண்களும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 32, 34 மற்றும் 35 வயதுடைய பலுகஸ்வெவ, பிடபெத்தர, அத்தகிரிய மற்றும் இரத்மலானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd