web log free
April 04, 2026

மின் கட்டணம், எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.

மேலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

அதேபோல், மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும்.

இதேவேளை இன்று ( 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணம் 21.9%  குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd