web log free
February 09, 2026

மொட்டு கட்சி ரணிலுக்கு அழுத்தம் - அநுர

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுப்பதாக அறியமுடிவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன முன்னணி அரசியல் ரீதியில் அபாயகரமான விளைவுகளை சந்திக்கும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் இவ்வாறான அழுத்தம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சதித்திட்டங்கள் மூலம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சீர்குலைப்பது முற்றிலும் சாத்தியமற்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd