பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட நபர்களுக்கு தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள்.
சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத நபர்களுக்கு இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமை காரணமாக பொலிஸாரின் பொது கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.