ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே 22ம் திகதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (23) தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் அந்தக் கருத்தை வெளியிட்டேன். நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்தால் ஆஜராக வேண்டும். ரகசிய சாட்சியம் அளிக்க ஆவலுடன் உள்ளேன். ரகசிய அறிக்கை கொடுப்பதற்காகவே தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. நீதிமன்றத்தில் வெளிப்படையாக சாட்சியம் அளித்தால்... அது என் வாழ்க்கையையும், என் குழந்தைகளின் குடும்பத்தையும் கூட அழிக்கும் என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, இது அரசியல் சித்தாந்தமோ அல்லது சில அரசியல் பிரச்சனைகள் உள்ளவர்களோ அல்ல. நான் மிகவும் நேர்மையான அறிக்கையை வெளியிடுகிறேன். " என்றார்.