பல வருடங்களாக விசாரணை நிறைவடையாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை விரைந்து முடித்து அந்த அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவிடம் பொலிஸ் மா அதிபர் உரிய பணியை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளினால் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியமும், கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்காமல் போனமை தெரியவந்துள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு ஒழுக்காற்று விசாரணைகளை விரைந்து முடித்து நீதி வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பல்வேறு அதிகாரிகளின் நிர்வாகத்தின் போது சிறு தவறுகளுக்கும் அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படுவதால் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை இழந்த அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோர் இருப்பது தெரியவந்துள்ளது.