web log free
May 05, 2026

கூட்டமைப்பு - திசைகாட்டி இடையே சந்திப்பு

தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மக்கள் சந்திப்புத் தொடரின் போது இந்த சந்திப்புகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த கலந்துரையாடல்கள் இந்த வாரம் நடைபெறும் என  குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரையில் தமக்கு அவ்வாறான அழைப்பு வரவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd