புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (05) முதல் விசேட பஸ் சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை தினமும் 12 விசேட புகையிரத சேவைகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.