எதிர்வரும் சில மாதங்கள் முக்கியமானவை என்பதால், வெளிநாட்டுப் பயணங்களை உடனடியாகக் குறைக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசியல் பணிகளுக்காக வரவேண்டியது அவசியம் என்பதால், முடிந்தவரை வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் மே தின கூட்டத்தின் பின்னர் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் பணிகளை முடுக்கிவிடுமாறும், மே மாதம் ஜனாதிபதி தேர்தலை நேரடியாக இலக்கு வைத்து அரசியல் பணிகளை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கட்சிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் பங்குபற்றுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.