web log free
April 30, 2026

ஒரே நாளில் இரு தேர்தல்கள்! சாத்தியமா?

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் அது முடியாத ஒன்று என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அதேசமயம் ஜனாதிபதித் தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வாக்குச் சீட்டு அச்சிடப்பட வேண்டும் என்றும் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இரு தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் வெவ்வேறு விதமாக கூட்டணி அமைக்கின்றன என்றார்.

"அத்தகைய தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் கூட்டணி பொதுத் தேர்தலில் பிரிந்துவிடும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd