web log free
February 07, 2026

உண்ணாவிரத்தை நிறைவு செய்து அத்துரலி தேரர் வைத்தியசாலையில்

வணக்கத்துக்குரிய அத்துரலியே ரத்தன தேரர், தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்குமாறு கோரி கடந்த 31ஆம் திகதி முதல், அத்துரலியே ரத்தன தேரர் உண்ணாவிரத போராட்டத்தை நான்கு நாட்களாக முன்னெடுத்தார்.

இந்த நிலையில், மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இதனையடுத்து அத்துரலியே ரத்தன தேரர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அத்துடன், உண்ணாவிரதத்தை நிறைவுசெய்த பின்னர் அம்பியுலன்ஸ் வண்டியின் ஊடாக அத்துரலியே ரத்தன தேரர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd