ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் அபிவிருத்திப் பணிகளை இயன்றவரை முடிக்குமாறு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல தொகுதிகளுக்கும் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தல்களில் பங்காளி அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் குறிப்பிட்ட உடன்பாடுகளை எட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலம் தேர்தல் காலமாக இருப்பதால் அது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.