தமிழ்நாடு - நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகையிலிருந்து இலங்கைக்கு செரியபாணி என்ற கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஆனால் மழை காரணமாக இந்த கப்பல் சேவை ஒரே வாரத்தில் ரத்து செய்யப்பட்டது என்பதும் இந்த கப்பலில் போதுமான பயணிகள் பயணம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் நாகையிலிருந்து இலங்கையின் காங்கேயம் துறைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் நாகை - இலங்கை இடையே பயணம் செய்ய இருப்பதாகவும் மே 13ஆம் திகதி முதல் இந்த சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.