web log free
April 25, 2026

அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்ட மொட்டு எம்பிக்கள்

எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று காலை 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd