web log free
February 21, 2026

அறிக்கை ஒன்றின் மூலம் மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

அரசுக்கு சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலப்பகுதியில் நாட்டை ஆளுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஏற்பாடாகும் என மஹிந்த ராஜபக்ஷ நினைவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பதன் மூலம் நாட்டுக்கு உற்பத்தி பலன் கிடைக்காது என்பதை தனியார்மயத்திற்கு ஆதரவான தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd