web log free
May 25, 2026

சஜித் - அநுர விவாதம் குறித்து ஹரின் நக்கல் பேச்சு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விவாதத்தை மக்கள் பார்வையிடும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறை தினமாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் இருவரும் விவாதத்தை நடத்த பயப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவால்களை ஏற்றுக்கொள்ளாத தலைவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது மக்களுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இது சாத்தியமில்லாத விவாதம் என்பதை சஜித் மற்றும் அநுர இரு தரப்புக்கும் நன்றாகவே தெரியும் என்றும், விவாதம் நடத்தப்பட்டால் ஒருவர் ஆழமான சிங்களம் பேசும் மற்றொருவர் ஆழமான ஆங்கிலமும் பேசும் விவாதத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd