web log free
May 04, 2026

அரசியல் களத்தில் குதிக்கும் சமிந்த வாஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், சமகி ஜன பலவேகயவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் அடுத்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

எனினும் இது தொடர்பில் சமிந்த வாஸ் இதுவரை உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

சமிந்த வாஸ் 1996 உலக சாம்பியன்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினராக பணியாற்றினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd