எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடல் தொடரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் மாநாடுகள் அடுத்த மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்வைத்தால், அதில் பல பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதில் தொழில்முனைவோரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவின் பெயர் கட்சித் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.