web log free
June 15, 2026

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த அறிவிப்பார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தனது முடிவை அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினங்களில் முன்மொழிப்படுவார் என வெளியாகியுள்ள தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd