21ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் தொடர்பில் சேகரிக்கப்பட்ட தகவல்களை கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க முடிந்திருந்தால், தாக்குதலின் பாதிப்பினை குறைத்திருக்க நிச்சயமாக முடிந்திருக்கும் என, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால், நேற்றைய தினம் (04) சாட்சியமளித்தபோது இதனைக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரமரட்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆஷு மாரசிங்க, ரவி கருணாநாயக்க, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு முன்னியிலேயே அவர் சாட்சியமளித்தார்.