web log free
June 16, 2026

சில பாடசாலைகளுக்கு நாளையும் பூட்டு

சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், தென் மாகாணத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும், மேல் மாகாணத்தின் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்த நிலைமை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய இரு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd