அதிக மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 9 நாட்களில் 879 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், அதிவேக வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 2647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன் எண்ணிக்கை 5,624 ஆகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,930 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2,487 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும் உள்ளனர்.