web log free
May 16, 2026

18 தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடித்து விட்டு அதிகாலை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர்.

அத்துடன் மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd