ஜூலை 1ஆம் திகதியுடன் காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ்போர்ட் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வெளிநாட்டு கடவுச்சீட்டு அதன் செல்லுபடியாகும் காலமான 10 வருடங்களை தாண்டிய பின்னர், இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை மட்டுமே அதற்கு மேலும் ஒரு வருடம் வழங்கப்படும் என அவர் குறிப்பிடுகிறார்.
இ-பாஸ்போர்ட் வழங்கல் நவம்பர் மாதம் முதல் தொடங்கும் எனவும், சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் கூடிய விரைவில் இ-பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் கோரியுள்ளது.