web log free
February 08, 2026

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர்.

இவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி, படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு மோதி இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து படகில் இருந்த 10 மீனவர்கள் மீதும் காங்கேசன் துறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd