web log free
September 18, 2025

ஞானசார தேரர் வெளிப்படுத்தும் பகீர் தகவல்!

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முஸ்லிம் வேடமணிந்த ஒரு குழு இந்த நாட்டில் பாரிய படுகொலைக்கு தயாராகி வருவதாக முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் தமக்கு அறிவித்ததாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், அப்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்து, இந்த ஆபத்தான நிலைமையை அவருக்குத் தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதனால் ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவில்லை என்றும் தேரர் கூறினார்.

அப்போது அவர் அம்பலப்படுத்திய 15க்கும் மேற்பட்ட தீவிரவாத கும்பல் நல்லாட்சியை கொண்டு வருவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேசிய மக்கள் சக்தியில் மறைந்திருந்ததாகவும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஜப்பான் சென்றிருந்த அனுர திஸாநாயக்க ஈஸ்டர் தாக்குதலுக்கான மூல காரணத்தை கண்டுபிடிப்பதாக உறுதியளித்துள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிணை பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd