ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் செயற்குழு கூட்டங்கள் கடந்த சில நாட்களாக பத்தரமுல்ல வோட்டர்சேஜ் ஹோட்டலில் மாவட்ட தலைவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, வஜிர அபேவர்தன, நிமல் லான்சா மற்றும் ஜனாதிபதி தேர்தல் செயற்குழுவின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் விசேட அம்சம் என்னவெனில், குறித்த விடுதியின் தனி இரகசிய அறையில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவர் வந்து பல அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதில் இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு சஹாப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஹோட்டல் கார் பார்க்கிங்கில் தங்களுடைய பாதுகாவலர்களை நிறுத்தி ரகசிய அறைக்கு கூட சென்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து இந்த அரசியல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.