சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே கே. பியதாச தான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக கூறுகிறார்.
ஹட்டனில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கே. கே. பியதாச மேலும் கூறியதாவது:
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வியாபாரியாக அரசியலில் பிரவேசித்து, மத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய என்னால் இயன்றதை செய்தேன், ஆனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தல் இந்த மாவட்டத்தில் இன்னும் செய்ய வேண்டியவைகள் ஏராளம் நாட்டின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் எனவே இந்த நாட்டின் அனைத்து வாக்காளர்களும் மிகவும் கவனமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாட்டின் எதிர்காலம் அழிந்துவிடும் எனவே இந்த தேர்தலில் போட்டியிடும் நான் உட்பட அனைத்து வேட்பாளர்களையும் கவனமாக பார்த்து பொருத்தமான நபருக்கு வாக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.