web log free
December 15, 2025

மோடியின் வருகை - போக்குரத்துக்கு மட்டுப்பாடு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய நாளை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக பாதை, பெலியாகொட மேம்பாலம், பொரளை ஊடாக கனத்தை சுற்றுவட்டம் , பொரளை டி.எஸ் சேனநாயாகக்க சந்தி முதல் காலி வீதி வரையும் இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்காரணமாக குறித்த காலப்பகுதியினுள் விமான நிலையத்துக்கு பயணிப்பவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd