வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரியைக் குறைக்கும் யோசனை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட யோசனைகளில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேரணையின்படி, தற்போது ஒவ்வொரு சம்பள விகிதத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரிகள் குறைக்கப்படும்.