web log free
October 23, 2024

அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் இந்த சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உட்பட நால்வர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பதோடு அவர்கள் அமைச்சரவை அமைச்சர் பதவிகளையும் வகிப்பார்கள்.

புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமைச்சரவை அந்த பதவிகளில் பணியாற்ற வேண்டும்.

எனினும் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கிய பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சு செயலாளர்களும் நிரப்பப்பட உள்ளனர்.

இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.