ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நான்காவது பிளவொன்று ஏற்படவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
கட்சியின் தலைவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்டுள்ள குழுவினரே, இவ்வாறு நான்காவது அணியை உருவாக்கவுள்ளனர் என அந்தத் தகவல் தெரிவித்தது.
அதில், தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் 30 பேரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரும், முன்னாள் ஆளுநர்கள் இருவரும் அடங்குகின்றனர் என அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைவதை விரும்பாத, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினரே, இவ்வாறு பிரிந்து செல்வதற்கு கலந்தாலோசித்துள்னர் என அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.