web log free
December 02, 2023

இன்று வருகிறார் நரேந்திர மோடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.

´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டுப் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.

நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.