முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் மூலம் உர மானியம் 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.
அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு தேவையான பணத்தை அரசாங்கமே ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.