web log free
December 02, 2023

தேரரிடம் கப்பம் கோரிய மூவர் கைது


தம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. அம்பகஸ்வெவ ராஹுல தேரரிடம் 100
மில்லியன் ரூபாய் பணத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சித்த சந்தேக நபர்கள்
மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி தேரருக்கு அழைப்பு மேற்கொண்டு மரண அச்சுறுத்தல்
விடுத்து 10 கோடி ரூபாய் பணத்தை கப்பமாக கோரியுள்ளனர்.

அதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரை
கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மூன்று அலைபேசிகளையும்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

6, 25, 34 வயதுடைய சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக
விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.