ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் அதிகளவான மது அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் தெரிவித்துவரும் கருத்துக்கள் பொய்யானவை என கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி கூறுகிறார்.
அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் 172 கலால் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இதன் மூலம் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.