web log free
October 06, 2024

ஜனாதிபதி - அமெரிக்க தூதுவர் இடையே சந்திப்பு

இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்தார். 

இதன்போது, புதிய ஆட்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஜூலி சங், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.