ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது மோசடி காரணமாக அல்ல என்றும் அவர் உண்மையை பேசியதால் தான் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
திருட்டு, மோசடிகளுக்கு எதிராக தனித்து போராடியவர் ரஞ்சன் ராமநாயக்க எனவும், பொதுத் தேர்தலின் பின்னர் அநீதிக்கு ஆளானவர்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.